மனம் போன போக்கில்

வாழ்த்துக்கள் சிந்து! 
உன்னை நினைத்துப் பெருமைப் படுவதை நான் கௌரவமாகக் கருதுகிறேன்!
உன்னைக் கண்டு வளரப்போகும் பெண் வீராங்கனைகளுக்கு இப்போதே மலர் தூவுகின்றேன்!
பூப்பந்தாடும் பூ
நீ புயல் பந்தாடி வென்றதோ வெள்ளிக் கின்னம்!
முதலடியே இத்தனை நெருக்கத்தில் என்றால் உன் அடுத்த அடி எப்படி இருக்கும்?
உன்னைக் கண்டாவது இந்தியா மதவிரோதங்களைக் கைவிட்டு சாதியப் பாகுபாடுகளைக் கழுவித் துடைத்துவிட்டு ஊழலை எரித்துவிட்டு பெருமைகொள்ளும் தளங்களில் வளரட்டும் கண்மணி!
வாழ்த்துகிறேன் உன்னை மீண்டும் மீண்டும்!
இந்த வாழ்த்து உனக்கே உனக்கானதல்ல, உன்னைக் கண்டு உயரப்போகும் அத்தனை நல்வீரப் பெண்களுக்கும்!

(ஒலிம்பிக் வெள்ளிக்கோப்பை வாங்கிய பூப்பந்தாட்டப் புயல்)

*
தங்கங்களாகத் தாங்களே இருப்பதால் வெள்ளியும் வெண்கலமும் போதும் என்று நினைத்தார்களோ
அல்லது தங்கத்தை ஆண்களுக்கென்று விட்டுவைத்தோம் என்று அடக்கத்தோடும் நக்கலோடும் சொல்லப் போகிறார்களோ                                           
*
*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்*
ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் "என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்" என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்.
*அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா? என்று கேட்டார்.*
இல்லை என பதில் சொன்னார்.
*அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.*
இல்லை என பதில் சொன்னார்.
*அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா? என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.*
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
*யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமுமில்லாத நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*
நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.
பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.
*உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.*
*மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை.*
எனவே வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்.
வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.
நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.
நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.
மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.
*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.*

*

>>>குஷ்பூவை குடும்பப் பெண் தரத்திற்கு காணமுடியுமானால்
தெய்வமாகவும் காணலாம்.
தாசி அபஞ்சிக்கு கம்பன் அடிமை.<<<
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அடிமையாய் இருங்கள்.
கலைஞரின் அடிமையாய் இருங்கள்
அம்மாவின் அடிமையாய் இருங்கள்
ரஜினியின் அடிமையாய் இருங்கள்
தலயின் அடிமையாய் இருங்கள்
குஷ்புவின் அடிமையாய் இருங்கள்
பறத்தையின் அடிமையாய் இருங்கள்
கொலைகாரனின் அடிமையாய் இருங்கள்.
ஆனால் இவர்களை எல்லாம் கடவுளாக்கி அழியாதீர்கள்.
அறம் என்பதன் பொருள் சுத்தமாகச் செத்துச் சுண்ணாம்பாய்ப் போய்விடும்       
வேந்தன் அரசு >>>நம் வேலையும் தப்பு கண்டுபிடிக்கிறதுதான், சிறக்கவிரும்புவோர் வரவேற்பார்கள். புகழ்ச்சி விரும்புவோர் தவிர்ப்பார்கள்<<<
தப்பு கண்டுபிடிப்பது தவறு கண்டு பிடிப்பது குறைகண்டு பிடிப்பது குற்றம் கண்டுபிடிப்பது எல்லாம் உண்மையில் மிகப் பெரிய வேலை.
எளிதில் கைகூடாத உயர்ந்த கலை.
அதைச் செய்வோரை வெகுவாகப் பாராட்ட வேண்டும்
ஆனால் அதை முதலில் நம்மிடம்தான் நாம் செய்ய வேண்டும்.
அடுத்தவனிடம் *மட்டும்* கண்டால் செய்தால் அது முழு மூடனின் செயல் அறிவிலியின் செயல் அற்பனின் செயல் கேவலப் புழுவின் செயல்!

*
அரசியல் விளையாட்டு என்று ஒரு பிரிவு ஒலிம்பிக்கில் இல்லையா?
இருந்தால் இந்தியா இரண்டாயிரம் மூவாயிரம் என்று தங்கப் பதக்கங்களைத் தட்டிச் செல்லும்

*
கமல் நடிக்கத் தொடங்கிய நாள்முதல் நான் அவரின் ரசிகன்!
இன்று இந்த நாள் வரை எந்த படமாக இருந்தாலும் அதில் கமல் தோன்றினால் என்னால் மகிழ்ச்சியாக உட்கார்ந்து பார்க்க முடியும்.
செவாலியே எல்லாம் அவருக்குப் பெரிய விருது என்று சொல்லிவிடமாட்டேன்.
கமலுக்கு விருது தர யாருமில்லை ஏதுமில்லை என்றே சொல்வேன்.
கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி மட்டுமல்ல உலகத்திற்கே அவர்தான் கலைக்கொடி என்று சொன்னால் அது மிகையாகாது.
உலகநாயகன் என்ற பட்டம்தான் அவருக்கு மிகச் சரி என்று நான் அவ்வப்போது நினைப்பேன்.

*
வேந்தன் அரசு <குர்-ஆன் ஒரு மொத்த நூலாக அப்படியே வந்து இறங்கிவிடவில்லை.>
அதனால்தான் சால்மன் ரஷ்டி ”சாட்டனிக் வெர்சஸ்” என்றார். முதல் வெர்சனை மக்கள் ஏற்காமல் விரட்டிவிட்டார்கள். பின்னர் பிற வெர்சன்கள் வந்தன.
>>>
சாத்தான் என்பது ஒருவருக்குள் இருக்கும் தீய சக்தி. உங்களிடம் சாத்தான் நிறைந்திருக்கிறான் வேந்தன். அதனால் இஸ்லாத்திற்கு யாதொரு கேடும் இல்லை. உங்களுக்கே கேடு!
முகம்மது நபிபெருமானார் அதீத இறைபக்தி யுடையவர். அவர் ஹிரா என்னும் குகையினுள் சென்று ஊனுறக்கமின்றி சில நாட்கள் தொடர்ந்து இருப்பார்.
அவர் இறைவன் அருளியதாய்க் கூறும் வசனங்கள்தாம் இறை வேதங்கள்.
எப்போதெல்லாம் கலக்கம் வருகிறதோ எப்போதெல்லாம் இன்னல்கள் வருகின்றனவோ, எப்போதெல்லாம் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லையோ. அப்போதெல்லாம் அவர் இறைவன் முன் மன்றாடி நிற்பார். கடுந் தியானத்தில் இருப்பார். வரும்போது இறைச் செய்தியோடு வருவார். இதுதான் அவரின் நம்பிக்கை.
மக்கா நகரில் இருந்தபோது வந்த வசனங்களை மக்கி என்பார்கள். அவை ஆரம்பகால வசனங்கள். பின் மதினா வந்தபின் வந்த வசனங்களுக்கு மற்றொரு பெயருண்டு.
நபிபெருமானார் இந்த உலககுக்கு மகா அறத்தைத் தந்திருக்கிறார். தூய்மையான உலகத்தைக் காட்டி இருக்கிறார்க். எல்லோரும் இன்புற்றிருபப்துவே அல்லாது வேறொன்றுமிலலி என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபித்திருக்கிறார்.
நீங்கள் யார்? சல்மான் ருஷ்டியார்?
நிலைதடுமாறிய அறமற்ற நாவுடைய சாத்தான் கைப் பொம்மைகள்தானே?
உலகம் முழுவதும் சுபிட்சமாய் வாழ வழி சொன்னாரா சல்மான் ருஷ்டி?
அல்லது வழிசொன்னீர்களா வேந்தன் அரசு.
சும்மா மூளைக்குள் அரிப்பெடுத்து வம்பளக்கிறீர்கள். வேறென்ன சாதித்துவிட்டீர்கள்.
சாத்தானின் பிடியிலிருந்து விலகுங்கள். உங்கள் உள்ளக் கசடுகளைக் கழுவுங்கள். மனிதனாய் மாறுங்கள்!

*
தந்தையின் உள்ளம் தாயை மட்டுமே உயிரில் ஏற்றிக்கொள்ளும் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.
’தவமாய்த் தவமிருந்து’ என்ற சேரனின் படம் தந்தையின் பாசத்தைச் சொல்லும் அருமையான திரைப்படம்.
பின் பிரகாஷ்ராஜ் ’அபியும் நானும்’ எடுத்தார்.
மகள் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த வெற்றி என்று இயக்குனர் சேரன் கூறினார்.
எனது மகள் வழக்கில் நீதிபதிகள் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும், பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி" என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சேரன், திடீரென கீழே விழுந்து கும்பிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதுதான் தந்தையின் உள்ளம்

*
ஒரு மூன்று பேர்!
பலமுறை புரியவைத்ததையே மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி வார்த்தைகளைப் போட்டுக் கேட்பார்கள்.
சரி இந்த முறை முழு விளக்கமும் தரலாம் என்று பக்கம் பக்கமாக எழுதிச் சொல்லான்லும். அப்போதைக்கு மட்டும் அப்படியே அகன்றுவிடுவார்கள்.
இரு தினங்கள் கழித்து மீண்டும் முருங்கை மரம் ஏறுவார்கள்!
கேள்விகள் மட்டுமே கேட்பார்கள். எந்த ஒரு தீர்வும் தரவே மாட்டார்கள்.
எந்தக் கேள்விக்கும் பதிலும் தரமாட்டார்கள்.
வாய்வன்முறைவேறு எகிறித் தாண்டும்.
என்ன செய்யலாம் இவர்களை    

*
இது சாத்தான்களே நிறைந்த உலகம். இறைவன் மீது அச்சம் கொண்டு அறம் அன்பு அறிவு சென்றால் அத்தனை சாத்தான்களும் அழிந்து இறைவனே நிறைந்த உலகம் மீளப்பெறும்.
இறைவனே நிறைந்த என்பதும் மனிதநேயமே நிறைந்த என்பதும் ஒரே பொருளுடைய இரு சொற்கள் 
*
உங்கள் தாயை மரபணு சோதனை செய்யாமல் தாய் என்று நம்புவது அன்பா? அறமா? அறிவா?
உங்கள் தந்தையை மரபணு சோதனை செய்யாமல் தாய் என்று நம்புவது அன்பா? அறமா? அறிவா?
உங்கள் சகோதரனை மரபணு சோதனை செய்யாமல் தாய் என்று நம்புவது அன்பா? அறமா? அறிவா?

*
Elamuruguporselvi Ramachandran ஆனால் இதெற்கெல்லாம் பின்னால் வேறு ஏதோ உலக சதி அல்லவா நடக்குறது போல் தெரிகிறது! இஸ்லாத்தை இழுப்பது பேருக்குத் தான் இல்லையா ஐயா?!
>>>>
ஆமாம்!
ஓர் உணர்ச்சிப் பூர்வமான விசயத்தை வைத்துத்தான் வீட்டில் அரசியல் செய்கிறார்கள்.
அப்படியேதான் ஊரிலும், நாட்டிலும் உலகத்திலும்.
அந்த அரசியலில் ஆதாயம் அடைபவர்கள் யார் என்று பார்த்தீர்களென்றால், ஏன் என்ற காரணம் சட்டென்று புரிந்துவிடும்   
*
என்னிடம் வரும் அர்த்தமற்ற கேள்விகளுக்கு நான் தரும் ஒரே பதில் இதுதான்!
இந்தக் கேள்விக்கும் எல்லோரும் இணக்கமாக வாழ்ந்து வன்முறையற்ற உலகம் காண்பதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
என்றால் உங்கள் திசை எது?
எதை நோக்கியது உங்கள் பயணம்?
அர்த்தமுள்ள பயணத்தில் நீங்கள் இருக்கிறீர்களா?
அல்லது கேவலமாக பயணத்தில் இருக்கிறீர்களா?
*
வில்லன்களைக் கொண்டுதான் நாம் நல்லதை ஊருக்குச் சொல்லமுடியும்.
ஒரு நல்ல கதையில் கண்டிப்பாக வில்லன்கள் வேண்டும்.
எது பிழை என்பதை வேறு எப்படி மக்களுக்குக் காட்ட முடியும்?

*
நீங்கள் பிழையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். நான் இதுகாறும் எழுதியவற்றை நீங்கள் மீள்வாசிப்பு செய்ய வேண்டும்.
தவிர, விரோதம் என்பது காரணமற்றது என்றால் நான் அதில் ஒன்றுமே செய்யமுடியாது.
விரோதம் என்பது அறியாமையால் என்றால் என்னால் நிறைய செய்ய முடியும்.
ஆக உங்கள் பயணம் வெறுப்பின் பயணம்!
உங்கள் பயணம் அன்பு அறம் அறிவு இணக்கம் வன்முறையற்ற வாழ்வு என்று ஆகும்போது, அவசியம் என்னிடம் வாருங்கள். நான் சொல்லும் ஒவ்வொன்றும் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
அதுவரை நிச்சயமாகப் புரியாது 

*
Nandha Kumar
என்ன கேட்கிறார்கள்... எதைப்பற்றி என்று சொல்லுங்கள்... முடிந்தால் எனக்குத் தெரிந்ததையும் பகிர்கிறேன்
அவர்களிடமே கேளுங்கள்
ஆக்கப் பூர்வமாக எதையும் கேட்கவே மாட்டார்கள், அது மட்டும் உண்மை.
அவர்களின் கேள்வி எதுவும் இந்த உலக அமைதிக்கோ சிறந்த அறவாழ்விற்கோ நல்லிணக்கத்திற்கோ பண்பட்ட மனித நேயத்திற்கோ ஒரு சிறு கல்லையும் நகர்த்தாது.
அதுமட்டுமல்ல பலமுறை பதிலிட்ட கேள்வியாகத்தான் இருக்கும். புதிதாக ஏதும் இருக்காது
நீங்களே பதில் சொல்லுங்கள்
வன்முறை அற்றவர்களாய் அவர்களை மாற்றுங்கள்
ஓர் ஊர் என்றிருந்தால் அங்கே ஒரு நம்பியார் ஒரு வீரப்பா ஒரு மனோகர் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை நான் மறுக்க வில்லை,
ஆனால் என்னால் எம் ஜி ஆர் வேசம் கட்டமுடியாது 
எம்ஜிஆர் அப்படியே ஓரமா கூட்டிட்டுப் போயி கும்மு கும்முன்னு கும்மி எடுப்பாரு   
*
பெண்களின் உடை
பெண்களின் உடை என்பது அதை அணிகின்ற பெண்களின் விருப்பம்.
சாதி மதம் பண்பாடு கலாச்சாரம் என்று எதையாவது சொல்லி எந்த உடையையும் வலுக்கட்டாயமாக அணிய பெண்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.
ஊருக்கு ஏற்ப உடை, வீதிக்கு ஏற்ப உடை, வீட்டுக்கு ஏற்ப உடை, தனக்கு ஏற்ப உடை என்று உடுத்தும் பெண்கள் முடிவு செய்யட்டும்.
ஏன் உடையில் ஆணாதிக்கமும் அதன் சுயநலமும் இனம், மதம், சாதி, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில்?
ஆயினும், வன்முறையைத் தூண்டும் உடை பெண்ணுக்கும் ஆணுக்கும் கூடவே கூடாது.
ஒரு பெண்ணால் காட்சி வன்முறை செய்து வலுவற்ற உள்ளங்களை உண்டு இல்லை என்று செய்யமுடியும்.

*
ஒரே ஒரு கேள்வி.
இஸ்லாத்தில் சாதிகள் இல்லை என்பது சரி. சாதிகள் கூடவே கூடாது என்பது சரி. அதுதான் இஸ்லாம் என்பது சரி.
ஆனால் சியா என்பதும் சுன்னா என்பதும் பிரிவுகள் தானே? சாதிகள் தானே? அவர்களுக்குள் திருமண உறவுகள் இல்லைதானே?
இந்தக் கொடுஞ் செயலின் பின் ஓர் இஸ்லாமியன் செல்லலாமா?
தன்னை ஏன் சுன்னா முஸ்லிம் என்று அழைத்துக்கொள்கிறான் ஓர் இஸ்லாமியன்?
நான் இஸ்லாமியன் எனக்குச் சாதி கிடையாது பிரிவு கிடையாது. பிரிந்து போகின்றவன் இஸ்லாமியன் இல்லை என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டாமா?

*
மார்க்கம் சாதியை அழிக்கிறது. அழித்தது.
ஒரு கருப்பினத்தவர், ஒரு தீண்டத்தகாதவர், ஒரு சிவப்பர், ஒரு கபில நிறத்தவர், பல சாதிகளாய் இருந்தவர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்தது மார்க்கம்தான்.
எல்லோரும் இங்கே சமம் என்று வணங்கும் இடத்தை மனித நேயம் மிக்கதாய்ச் செய்தது மார்க்கம்தான்
இல்லாதாரை உயர்த்த ஈகையை கட்டாயமாக்கியதும் மார்க்கம்தான்
அட இன்னும் ஆயிரம் சொல்வேன்.
ஆனால் நீங்கள்தான் செவிரராயிற்றே  
உங்கள் காதில் நான் ஏன் ஊதவேண்டும் சங்கு  
ஆளைவிடுங்கப்பா... ஜூட் !!!

*
கனவின் விதையே தையலே
கண்டதும் விழுந்தேன் தையிலே
கவிதை
கவிதை

*
இந்த வேறுபாடுகளை எல்லாம் சொல்லாதீர்கள்.
ஒருவன் பிரிந்தால், நீங்கள் ஏன் நானும் பிரிந்தேன் என்கிறீர்கள்?
நீங்கள் மூல இஸ்லாத்தில்தானே இருக்க வேண்டும்?
சுன்னா என்று ஏன் அழைத்துக்கொள்ள வேண்டும்?
என்றால் பிரிவில் சாதியில் உங்களுக்கும் அதீத விருப்பம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?   
*
முகம்மது நபி அவர்கள் குர்-ஆனைப் பின்பற்றினார்
குர் ஆனைப் பின்பற்றினால் நாம் முகம்மது நபிபெருமானைப் பின்பற்றியதாய் அர்த்தம்.
குர் ஆன் ஒரு சொல்லும் மாற்றமுடியாமல் பாதுகாக்கப்பட்டது.
குர் ஆன் சத்தியம்
அதைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர்கள்.
நீங்கள் இஸ்லாமியர்தானே?
குர் ஆனின் படி பிரிவுகள் இல்லை. நீங்கள் பிரிந்தால் நீங்கள் இஸ்லாமியர்களே இல்லை.
பிரிவினையைப் பாராட்டும் ஒரு பெயரை நீங்கள் உங்களுக்குச் சூட்டிக்கொண்டால் நீங்கள் குர்-ஆனைவிட்டு விலகுகிறீர்கள் என்று பொருள்தானே?
சிந்தியுங்கள்!

*
பெருங்கல்லை அசைக்கும்போது கொஞ்சம் முக்கல் முனகல் நம்மிடமிருந்து வரத்தான் செய்யும்.
அதற்காக நாம் நம்பிக்கை அற்றவர்கள் அல்ல.
அசைக்கமிடுயாத கல்லையும் உடைத்து அசைப்போம்!




 


 

 



 


No comments: