வானத்தைப்பார்


அஃறிணைதான்
உயர்திணை
வானத்தைப்பார்

மிகப்பெரியதென்று
வேறொன்றில்லை
வானத்தைப்பார்

ஐம்பூதங்களின்
மூலம்
வானத்தைப்பார்

தீர்க்கதரிசிகள்
சொல்லாதது இல்லை
வானம் தாண்டி மட்டும்
சொன்னதே இல்லை

சொர்க்கம் நரகம் கண்ட
ஆன்மீக தரிசனங்கள்
வானம் துளைத்துக்
கண்டதே இல்லை

வானத்தை உடைத்த
அறிவியலும் இல்லை

வான ஓட்டினைத்
துளைத்துச் சென்றதாய்
ஒரு நட்சத்திரமும் இல்லை

சகலத்துக்கும் தொடக்கம்
யாவும் அதில் அடக்கம்
வானத்தைப்பார்

2 comments:

Anonymous said...

ஐம்பூதங்களில் சிறந்தது - எல்லாவற்றிற்கும் மூலம் - அடிப்படை - என்ற கருத்து சிந்திக்கத் தக்கது.

அன்புடன் ..... சீனா

Anonymous said...

எனக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு ஆசான்.. இரவில் வானத்தை பார்ப்பது.. சில சமயங்களில் அப்படியே லயித்து விடுவேன்... அப்போதெல்லாம் மனதில் தோன்றும் கேள்வி "நான் யார்? நான் இங்கு பிறந்த காரணம் என்ன? அண்டவெளியில் வேறு யார் இருக்கிறார்?" கேள்விகள் வளர்ந்து கொண்டே போகும். பதில் கிடைப்பது / கிடைக்காமலிருப்பது என்பது வேறு விடயம். இப்போது நீங்கள் கேட்ட கேள்வியும் கூட சேர்ந்துள்ளது. முடிவெது? தொடக்கமெது? என்று தெரியாமல். அந்தரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறோம்...
இது மாதிரியான கேள்விகளுக்கு விஞ்ஞானமும் பதில் தராது... மெய்ஞானமும் பதில் தராது...
உங்கள் கவிதையை படித்த பிறகும் வானத்தை பார்க்கிறேன்....