பச்சை நிறக் கண்கள்


தம் நிழல்களை
இமைகளாய்க் கொண்ட
பச்சை நிறக் கண்கள்
மனிதநல மேன்மைதனைப்
பொழுதுக்கும்
பார்வையிட்டுக்கொண்டே
காடுகளாய்

தம் சுயநலமே
தாகமாய்க் கொண்ட
குருதிக் கரங்கள்
பச்சை விழி வேரறுக்க
பொழுதுக்கும்
சுற்றியலைந்துகொண்டே
மனிதர்களாய்

1 comment:

Anonymous said...

அது என்னாவோ தெரியவில்லை - இயற்கை அளித்தாலும், அதை அழிப்பதையே முழு மூச்சாய்க் கொள்கின்றான் மனிதன். என் செய்வது ?

அன்புடன் ..... செல்வி ஷங்கர்