Posts

Showing posts from March, 2017
நெஞ்சுடையச் செய்திடுமோ
என்றஞ்சி
தன் பொன் முட்டையை
அடைகாத்துத்
தவித்துத் துடித்துக்
காத்திருக்கும் மௌனம்

சட்டென்று
தாறுமாறாய் உடைந்து
வெளியேறும்
தகரக் குஞ்சுகளாய்

மௌனக்
கவிமொழியறியா
மந்தைகளிடம்

அன்புடன் புகாரி
20170321
பட்டில் வைத்துப்
பவளத்தில் வளர்த்த
என் தேவதை மகளை

முதிர்கன்னியாகவே
வைத்திருப்பேன்

கழுதைக்குக்
கட்டிக்கொடுப்பேன்

பாழுங் கிணற்றில்
பிடித்துத் தள்ளுவேன்

குதிருக்குள் அமர்த்தி
நெல்கொட்டி மூடுவேன்

எரியும் நெருப்பில்
இறங்கச் சொல்வேன்

ஆனால்...

அமெரிக்க
மாப்பிள்ளைக்கு மட்டும்
கட்டித் தரவே மாட்டேன்

இது
டிரம்பின் வெற்றிமீது உறுதியாக
டிரம்பின் நிறம்மீது நிச்சயமாக
டிரம்பின் ஆட்சிமீது சத்தியமாக

அன்புடன் புகாரி
20170305