மேலும் நிச்சயமாக
 நாம் மனிதனைப் படைத்தோம்,
 அவன் மனம்
 அவனிடம் என்ன பேசுகிறது
 என்பதையும் நாம் அறிவோம்;

 அன்றியும், 
 பிடரி நரம்பை விட
 நாம் அவனுக்கு
 சமீபமாகவே இருக்கின்றோம்.

 குர்-ஆன் 50:16.

ஒருவனின் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதை எனக்குத் தெரியும் என்கிறான் இறைவன்.

அதாவது ஏறத்தாழ ஏழரை பில்லியன் மக்களின் இதயம் பேசுவதை இறைவன் ஒருவனாக மட்டுமே இருந்துகொண்டு கேட்பான் என்கிறான்.

எப்படி?

உருவம் இருந்தாலா அல்லது அருவமான உயர் சக்தியாய் இருந்தாலா?

இதில் எது சாத்தியமாகக் கூடும்?

இறைவன் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறான். ஒருவருக்கு மேல் ஒருவர் அறிவில் உயர்ந்தவர்களாய் வந்துகொண்டே இருப்பார்கள் என்று உறுதி செய்கிறான்.

ஆனால் சிந்திக்கவே சிந்திக்காதே என்று சில மதவாதிகள் மனிதனிடம் சொல்கிறார்கள்.

இறைவனின் தேவையும் சில மதவாதிகளின் தேவையும் அல்லது அறிவின்மையும் இதில் தெளிவாகவே புரிகிறதல்லவா?

அடுத்தது...

பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாக இருக்கின்றோம் என்று ஏறத்தாழ ஏழரை பில்லியன் மக்களையும் பார்த்து இறைவன் சொல்கிறான்.

சரிதானே?

உருவம் இருந்து ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு இருப்பவனால் இது இயலுமா அல்லது அருவமாய் உயர் சக்தி கொண்டு எங்கும் வியாபித்திருக்கும் ஒருவனால் இது இயலுமா?

உங்கள் சிந்தனையின் எல்லைதான் உங்களின் பதில்

ஆகவே நீங்கள் தரப்போகும் பதில் எனக்கு உங்கள் சிந்தனையின் எல்லையை மட்டுமே காட்டித் தரும். வேறு எந்த மாற்றமும் நமக்குள் ஆகப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது.

நன்றி நண்பர்களே

அன்புடன் புகாரி

2 comments:

mohamedali jinnah said...

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.- குர்-ஆன்2:21.
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.